facebook

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக M.L.M. அன்வர் நியமனம்

Colombo (News 1st) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக, திணைக்களத்தில் உதவி பணிப்பாளராக பணியாற்றிய M.L.M. அன்வர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக பணியாற்றி வேறு நிறுவனமொன்றுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள A.B.M. அஷ்ரப்பிற்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள M.L.M. அன்வர் அலியிடம் A.B.M. அஷ்ரப்பினால் உத்தியோகபூர்வமாக ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

The post முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக M.L.M. அன்வர் நியமனம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3lFaLcL

Post a Comment

0 Comments