facebook

குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவர் உயிரிழப்பு

Colombo (News 1st) கிளிநொச்சி – தர்மபுரம், குமாரசாமிபுரம் பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு அருகிலுள்ள காணியொன்றில் தேன் எடுக்கச்சென்ற போதே இவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார். 12 ஆம் கட்டை – குமாரசாமிபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

The post குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவர் உயிரிழப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2VFVz4l

Post a Comment

0 Comments