facebook

வலான வனப் பகுதியில் துப்பாக்கிகள், ரவைகள் மீட்பு 

Colombo (News 1st) வெலிகம – வலான வனப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றிரவு (19) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5 துப்பாக்கிகள், 8 மெகசின்கள் மற்றும் 10 ரவைகள் ஆகியன பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த ஆயுதங்கள், தென் பகுதியிலுள்ள பாதாள குழுவினருக்கு உரித்தானதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

The post வலான வனப் பகுதியில் துப்பாக்கிகள், ரவைகள் மீட்பு  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3y3Ni7w

Post a Comment

0 Comments