facebook

கிரேண்ட்பாஸ் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Colombo (News 1st) கொழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், நாகலகம் வீதியைச் சேர்ந்த 49 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (09) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கிரேண்ட்பாஸ் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3CFtNpo

Post a Comment

0 Comments