facebook

வல்வெட்டித்துறையில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை; மைத்துனர்கள் தலைமறைவு

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை – வல்லுட்டி கிராமத்தில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது மைத்துனர்களால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். வல்லுட்டி கிராமத்தை சேர்ந்த 31 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். […]

The post வல்வெட்டித்துறையில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை; மைத்துனர்கள் தலைமறைவு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3CU5fJq

Post a Comment

0 Comments