facebook

வட்டரக்கயில் விபத்து: 3 மாத சிசு உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு 

Colombo (News 1st) மீகொட – வட்டரக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிசு உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கொடகமயிலிருந்து பயணித்த லொறி ஒன்றுடன், பாதுக்கையிலிருந்து சென்ற முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். இதன்போது, முச்சக்கரவண்டியின் சாரதி, அதில் பயணித்த 57 வயதான பெண், மூன்று மாத சிசு ஆகியோர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொருவர் பலத்த காயமடைந்து, கொடகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் கூறினர். […]

The post வட்டரக்கயில் விபத்து: 3 மாத சிசு உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jhbkX5

Post a Comment

0 Comments