facebook

அவசர சிகிச்சை பிரிவுகளில் 186 கொரோனா நோயாளர்கள் – சுகாதார அமைச்சு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (27) வரை 942 கொரோனா நோயாளர்கள் ஒக்சிஜனின் உதவியுடன் சிகிச்சை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட நீண்டநாள் நோய் தாக்கங்களுக்கு உள்ளான 4,347 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments