facebook

Pfizer தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை வழங்குகிறது இஸ்ரேல்

Colombo (News 1st) இஸ்ரேலில் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கான மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று ஆரம்பமாகின. Pfizer தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 61 ஆவது வயதை எட்டவுள்ள இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog -இற்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது. அவரது மனைவி Michal-உம் மூன்றாவது டோஸினை பெற்றுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் முதலாவது நாடாக இஸ்ரேல் பதிவாகியுள்ளது.

The post Pfizer தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை வழங்குகிறது இஸ்ரேல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3rGhwf8

Post a Comment

0 Comments