facebook

சக்தியின் ஆடிவேல் சக்திவேல் விழா நிறைவு

Colombo (News 1st) சக்தியின் ஆடிவேல் சக்திவேல் விழா இன்று கதிர்காமம் திருத்தலத்தில் இனிதே நிறைவு பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் திருத்தலத்தில் இன்று வேலாயுத பெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக்கந்தன் ஆலய ஆடிவேல் மகோற்சவப் பெருவிழாவினை முன்னிட்டு இம்முறையும் ஆடிவேல் சக்திவேல் விழாவை கெப்பிட்டல் மகாராஜா குழுமம் ஏற்பாடு செய்திருந்தது. கதிர்காமத் திருத்தலத்திற்கான யாத்திரையை போற்றும் வகையில் வருடாந்தம் ஆடிவேல் சக்திவேல் விழா நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

The post சக்தியின் ஆடிவேல் சக்திவேல் விழா நிறைவு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3kOaL9C

Post a Comment

0 Comments