facebook

ஒன்று ப‌டுவோம்; உய‌ர்வான‌, நேர்மையான‌ அர‌சிய‌லை ப‌ல‌ப்ப‌டுத்துவோம் - ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் கொள்கை பிரகடனம்


நாம் என்ன‌ சொல்கிறோம்?

1. க‌ட்சி என்ப‌து த‌னி ந‌ப‌ர்க‌ளின் ந‌ல‌ன்க‌ளுக்காக‌ அல்ல‌, ச‌மூக‌த்தின் ந‌ல‌னுக்காக‌.
2. ம‌க்க‌ளின் வாக்குக‌ளைப்பெற்ற‌ க‌ட்சி ம‌க்க‌ளுக்கு சேவை செய்ய‌ வேண்டும். ம‌க்க‌ள் வாக்கு கிடைக்காத‌ க‌ட்சி ம‌க்க‌ளுக்காக‌ குர‌ல் எழுப்ப‌ வேண்டும், ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ளை ம‌க்க‌ளுக்கு சேவை செய்ய‌ வ‌லியுறுத்த‌ வேண்டும்.
3. தொட‌ர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் க‌ட்சிக‌ளை ம‌க்க‌ள் நிராக‌ரிக்க‌ வேண்டும்.
4. அர‌சிய‌ல் என்ப‌து வியாபார‌ம் அல்ல‌. அது ம‌க்க‌ளுக்கான‌ உய‌ர்ந்த‌ சேவைக‌ளை செய்யும் சாத‌ன‌மாகும்.
5. அர‌சிய‌லுக்காக‌ பொய் சொல்ல‌ வேண்டாம், வ‌ஞ்ச‌க‌ம் செய்ய‌ வேண்டாம். யாரையும் ம‌ன‌ம‌றிந்து ஏமாற்ற‌ வேண்டாம்.
6. அர‌சியல் வெற்றிக்காக‌ யாரும் ச‌ண்டை பிடிக்க‌ வேண்டாம். வெற்றியோ தோல்வியோ அத‌னை ஏற்றுக்கொள்ளும் ம‌னோ நிலை ச‌க‌ல‌ருக்கும் வ‌ர‌ வேண்டும்.
7. அர‌சிய‌லுக்காக‌ யாரும் யாரையும் துன்புறுத்த‌வோ கொலை செய்ய‌வோ வேண்டாம்.
8. அர‌சிய‌லில் உண்மையையும், நேர்மையையும் க‌டைப்பிடியுங்க‌ள். உண்மை என்றாவ‌து ஒரு நாள் வெல்லும்.
9. க‌ட்சியை வ‌ள‌ர்க்க‌ முத‌லில் தியாக‌த்துட‌ன் செய‌ற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டாதீர்க‌ள். புதிய‌ ப‌ல‌ ஜாம்ப‌வான்க‌ள் க‌ட்சிக்குள் வ‌ந்தாலும் ப்ழைய‌வ‌ர்க‌ளுக்குரிய‌ இட‌த்தை கொடுங்க‌ள். க‌ட்சியை விட‌ க‌ட்சியில் உள்ள‌ ம‌னித‌ உள்ள‌ங்க‌ள் பெறுமான‌மிக்க‌வை.
10. அர‌சிய‌லில் ந‌ம‌து இல‌ச்சிய‌ம் என்ப‌து நேரான‌ வ‌ழியில் ம‌க்க‌ளுக்கு சேவை செய்வ‌தாக‌ இருக்க‌ வேண்டும். குறுக்கு வ‌ழி மூல‌ம் அர‌சிய‌ல் சேவை செய்ய‌ வேண்டும் என்ற‌ தேவை ந‌ம‌க்கு தேவையில்லை.
ஒன்று ப‌டுவோம்.
உய‌ர்வான‌, நேர்மையான‌
அர‌சிய‌லை ப‌ல‌ப்ப‌டுத்துவோம்.
க‌றை ப‌டியாத‌ க‌ட்சியில் ந‌ம‌து ஒற்றுமை என்ப‌து
ம‌றை காட்டும் வ‌ழி என்ப‌தில் தெளிவு காணுங்க‌ள்.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் -
ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி

Post a Comment

0 Comments