facebook

அமெரிக்க பொலிஸார் - சிறுவர்கள் இடையே துப்பாக்கிச் சமர்


அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறார் இருவர் பொலிஸ் அதிகாரிகளைக் குறிவைத்துச் சுட்டதாகத் தெரியவந்துள்ளது. 
12 வயது சிறுவனும் 14 வயது சிறுமியும், தாங்கள் தங்கியிருந்த சிறுவர் இல்லத்திலிருந்து தப்பி ஓடியதாக நம்பப்படுகிறது.
புளோரிடா மாநிலத்தின் எண்ட்டர்பிரைஸ் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் அவர்கள் அத்துமீறி நுழைந்தபோது அங்கு துப்பாக்கிகளைப் பார்த்தனர். அந்த வீட்டில் துப்பாக்கிகளும் தோட்டாக்களும் பெருமளவு இருந்ததாகக் கூறப்பட்டது.
சிறார் இருவரும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததைப் பார்த்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் அங்கு சென்றபோது, சிறுமி தன் கையிலிருந்த துப்பாக்கியை அதிகாரிகளை நோக்கித் திருப்பியதாகத் தெரிகிறது.
அதனால் அவள் சுடப்பட்டாள். சுமார் அரை மணி நேரத்தில் 4 முறை துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது.
இதற்கிடையே, ஏ.கே – 47 துப்பாக்கியைப் பிடித்திருந்த சிறுவன், அதனைக் கீழே போட்டு விட்டான். சிறார் இருவர் மீதும் என்ன குற்றச்சாட்டு சுமத்துவது என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

Post a Comment

0 Comments