facebook

உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு - ஐ.நா சபை கவலை


உலகளாவிய ரீதியில் உணவு பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்திருப்பதாகவும் அதனையிட்டு  ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவிப்பதாகவும் அறிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகவும் கூடுதலான அதிகரிப்பு இதுவாகும் என்று பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. கொரானோ வைரஸ் பேரவையினால் ஏற்பட்ட பாரிய அளவிலான நெருக்கடி இதில் தாக்கம் செலுத்தி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள பணவீக்கமும், உலகப் பொருளாதார நெருக்கடியும் சீரடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments