facebook

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போர் கடவத்தை வழியாக வெளியேற முடியாது


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடுவலை வழியாக பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் கடவத்தை வழியாக வெளியேற முடியாது என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து கடவத்தை வழியாக வெளியேறும் பகுதி நீரில் மூழ்கியுள்ளமையினால் வெளியேறு முடியாதுள்ளதாக அந்த அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதனால் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments