facebook

எரிபொருள் விலை அதிகரிப்பு சர்ச்சை : இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் உதய கம்மன்பில


எரிபொருள் விலை அதிகரிப்பு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று எரிசக்தி அமைச்சின் மூத்த செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.  வாழ்க்கை செலவுக்கான அமைச்சரவை துணைக் குழுவும் எரிபொருள் விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்ததாக அவர் கூறினார்.

இதற்கிடையில், எரிபொருள் விலையை அதிகரிக்கும் முடிவுக்கு  பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும்  என்று SLPP நேற்று அறிவித்தது.  இந்த நிலைமைக்கு உதய கம்மன்பில முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு தனது அமைச்சக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் SLPP   செயலாளர், வழக்கறிஞர் சாகர கரியவாசம் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். 

மேலும் அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும்  கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படக்கூடாது என்றும் எரிபொருள் விலையை அதிகரிக்க எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கூறினார்.  பொதுஜன பெரமுன செயலாளர், வழக்கறிஞர் சாகர கரியவாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் தனது கட்சியையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்துவதற்காக இதுபோன்ற சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறாரா என்பதில் நியாயமான சந்தேகம் உள்ளது என்றும் கூறினார் .

 இதற்கிடையில், அந்த  அறிக்கைக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று 13 பதிலளிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இன்று தனது அமைச்சில் நடைபெறவுள்ள சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் இதற்கு பதிலளிப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருக்கிறார்.


Udaya Prabhath Gammanpila


Post a Comment

0 Comments