facebook

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய மேலும் 947 பேர் கைது


கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 947 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments