facebook

மாவனெல்லையில் மண்ணில் புதையுண்ட வீடு - 4 பேரை காணவில்லை


மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மண்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கேகாலை அல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் குறித்து குறித்த நபருக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு அவரை வீட்டில் இருந்து வௌியேற கூறியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments