facebook

கொழும்பில் 29 KG கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது


கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் வீடு ஒன்றில் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 129 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 37 வயதுடைய தெமடகொடை, வெலுவன வீதி பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் மற்றும் கேரள கஞ்சா தொகை மேலதிக விசாரணைகளுக்காக பொிலஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விசேட அதிரடிப் படை சிப்பாய்களினால் சூரியவெவ பிரதேசத்தில் கஞ்சா சேனை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு 3 ஆயிரம் கஞ்சா செடிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருடன் கஞ்சா செடிகள் தொகை செவணகல பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் எம்பிலிப்பிட்டி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊகட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments