facebook

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 'குரு அபிமானி' 2500/= ரூபா கொடுப்பனவு



நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம்' கொள்கைப் பிரகடனத்திற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்களை மனிதவள அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தரப்பினராக அடையாளங்காணப்பட்டு, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட திட்டவட்டமான பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களுக்கு நிரந்தரக் கொடுப்பனவை வழங்குதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் 250/= ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2500/= ரூபாவாக அதிகரிப்பது உகந்ததென அடையாளங்காணப்பட்டுள்ளது.
அதற்காக, 2021 யூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்கத்தால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் 250/= ரூபா மாதாந்தக் கொடுப்பனவு, அடையாளங்காணப்படும் குறிகாட்டிகளுக்கமைய தகுதி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500/= ரூபா வரை அதிகரிப்பதற்கும், அதன் முதற்கட்டமாக 25,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொடுப்பனவு பெறுவதற்கான தகைமைகள்

குறித்த ஆசிரிய / ஆசிரியைகளின் வயது 18 வருடங்களுக்கு மேற்பட்டதாகவும் 65 வருடங்களுக்கு குறைவாகவும் இருத்தல் வேண்டும்.

குறித்த ஆசிரிய / ஆசிரியைகளின் ஆகக் குறைந்த கல்வித் தகைமை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (சா/த) சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

மற்றும் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தில் (சிறுவர் செயலகம் பதிவுசெய்த நிறுவனமொன்றிலிருந்து பெற்ற முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி / முன்பள்ளி பற்றிய டிப்ளோமா இருத்தல் வேண்டும். 

அல்லது, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனமொன்றிலிருந்து பெற்ற முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி / முன்பள்ளி பற்றிய ஒருவருட டிப்னோமா / சான்றிதழ் பாடநெறியைப் பயின்றிருத்தல் வேண்டும். 

அல்லது, மூன்றாம்நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட (Accreditation) பயிற்சி நிறுவனமொன்றிலிருந்து பெற்ற (NVQ Level 4 அல்லது அதற்கு மேற்பட்ட) முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி / முன்பள்ளி பற்றிய டிப்ளோமா / சான்றிதழ் பாடநெறியைப் பயின்றிருத்தல் கட்டாயமாகும்.

மேற்படி ii இல் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைதல் என்பது, தாய்மொழி மற்றும் கணிதம் உள்ளிட்ட 06 பாடங்களில் சித்தியும் 03 பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும் என்று பொருள்படும்.

IV. எவ்வாறாயினும் மேற்படி க.பொ.த (சா/த) பரீட்சையில் சீத்தியடையாத ஆசிரியைகளின் தொடர்ச்சியான சேவைக்காலம் 5 வருடங்களாகவும் முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி பற்றிய டிப்ளோமா தகுதி இருந்தால் இந்த நன்மையைப் பெற்றுக்கொடுக்கலாம்.


Post a Comment

0 Comments