facebook

கொரோனா காலத்தில் எம்.பிக்களுக்கு அவசரமாக வாகனங்களை இறக்குமதி செய்வது ஏன்?


நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கு புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வசந்த சமரசிங்க,

அலசரமாக வாகனங்களை வாங்குவது குறித்து மஹிந்த ராஜபக்ஷ 18 ஆம் திகதி அமைச்சரவைக்கு அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்திருந்தார்.

இவ்வாறு வாகனங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை வங்கியில் 3637 மில்லியன் கடனாக பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு கடன் வாங்கி வாகனங்கள் வாங்குவது ஏன்? மருத்துவமனைகளுக்கு வாகனங்களை வழங்கவா? மருத்துவ ஊழியர்களுக்கு வசதி செய்யவா? தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விரிவுபடுத்துவதற்காகவா? இதை எல்லாம் விடுத்து இந்த வாகனங்கள் அனைத்தும் ஏன் இறக்குமதி செய்யப்படுகின்றன?

இதுவரை நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படவில்லை என்று தமது ஆதங்கத்தை வெளியிட்டார்.

Post a Comment

0 Comments