facebook

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் பள்ளிவாயல்கள் திறந்துள்ளதாக முறைப்பாடு


பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் பள்ளிவாயல்கள் திறந்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களில் நகரங்களில் உள்ள பள்ளிவாயல்கள் மூடப்பட்டிருந்தாலும் கிராமங்களில் காணப்படும் பள்ளிவாயல்கள் முடக்க நிலையிலும் திறந்து இருப்பதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் அரச உயர்மட்ட கூட்டங்களிலும் கவணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மிக வேகமாக வைரஸ் பரவல் இடம்பெறும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த விடயத்தில் உலமாக்கள் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப் தெரிவித்தார்.

நேற்றைய தினம் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப் வெளியிட்ட ஓடியோ பதிவு 



Post a Comment

0 Comments