facebook

விமானங்கள் நாட்டுக்கு வருவதில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் தீர்மானம்


நாட்டுக்குவரும் அனைத்து பயணிகள் விமானங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தீர்மானத்தை நீடிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்பது குறித்த இறுதி முடிவு கொவிட் 19 கட்டுப்பாட்டு குழுவால் அறிவிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பயணக் கட்டுப்பாடுகள் தொடர்வது மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் என்றார்.

இலங்கைக்கான அனைத்து பயணிகள் விமானங்கள் நாட்டுக்குள் வருவதை மே மாதம் 21 நள்ளிரவு முதல் 14 நாட்கள் இடை நிறுத்துவது என சிவில் விமான  சேவைகள் அதிகார சபை முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்தத் தடை இலங்கையில் இருந்து வெளியேறுகின்ற பயணிகள் விமானங்களுக்கு பொருந்தாது. 

Post a Comment

0 Comments