facebook

கண்டி மாவட்டத்தில் 7 தமிழ் மொழிமூல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தயர்முயர்த்த தெரிவு


கௌரவ பஸில் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கையில் ஆயிரம் (1000) பாடசாலைகளை தேசிய பாடசாலை மட்டத்துக்கு தரம் உயர்த்துவதற்கான பாடசாலை அபிவிருத்தி திட்டம் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சௌபாக்கிய தெக்ம வேலைத் திட்டத்தில் கீழ் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.


பின்தங்கிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்து பின்தங்கிய ஊர்களில் இருக்கும் மாணவர்களுக்கும் தேசிய மட்டத்தில் வளங்களுடனான ஒரு சூழலை இந்தப் பிரதேச பாடசாலைகளில் ஏற்படுத்தி தரமான கல்வியை இந்த நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமனாக வழங்க வேண்டும் என்ற ஒரு உயர்தரமான குறிக்கோளை முன்வைத்தே இந்த புதிய திட்டம் தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் பின்வரும் தமிழ் மொழிமூல (முஸ்லிம்) பாடசாலைகள் தற்போதைய நிலைமையில் இந்தத் திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளன என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

1) தெல்தொட்டை முஸ்லிம் வித்தியாலயம் - கண்டி கல்வி வலயம்.

2) உடதலவின்னை ஜாமிஉல் அஸ்ஹர் - வத்தேகம கல்வி வலயம். 

3) அக்குரனை பாலிகா வித்தியாலயம் - கடுகஸ்தொட்டை கல்வி வலயம். 

4) உலப்பனை அல் இக்ரா வித்தியாலயம் - கம்பளை கல்வி வலயம். 

5) தெஹிஅங்கை அல் அஸ்ஹர் மத்திய மகா வித்தியாலயம் - தெனுவரை கல்வி வலயம். 

6) வெலம்படை முஸ்லிம் மஹா வித்தியாலயம் - தெனுவரை கல்வி வலயம். 

7) புனித மேரிஸ் கல்லூரி நாவலப்பிடி - கம்பளை கல்வி வலயம். 

இந்த பாடசாலை அபிவிருத்தி திட்டத்திற்கு கண்டி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட பாடசாலைகளை உள் வாங்குவதற்காக சகல விதத்திலும்  ஒத்துழைப்பு வழங்கி எமது சமூகத்துக்கு பலமாக நின்ற மத்திய மாகாணத்தின் ஆளுனர் கௌரவ லலித் யூ கமகே, அதேபோல் மத்திய மாகாண பிரதான செயலாளர் திரு காமினி ராஜரட்ண,  மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் உதவிப் பணிப்பாளர்கள்,  கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் அதேபோல் பாடசாலை அதிபர்கள், அபிவிருத்தி சங்கங்கள் பெற்றார்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோர்கள் அனைவருக்கும் நான் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.

கண்டி மாவட்ட பொது ஜன பெரமுன அமைப்பாளரும் தலைவருமான கௌரவ விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களின் வழிகாட்டலுக்கு இணங்க, கண்டி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தவிசாளரும் யட்டினுவர தேர்தல் தொகுதி அமைப்பாளருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார அவர்களின் முன்னெடுப்பிலும் உடுனுவரை பொது ஜன பெரமுன அமைப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார அவர்களின் ஒத்துழைப்பிலும் இந்த பாடசாலைகள் இத்திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டதை அடுத்து கண்டி மாவட்ட முஸ்லிம் சமூகம் சார்பாக அவர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கண்டி மாவட்டத்துக்குள் இந்தத் திட்டத்துக்கான பொருத்தமான பாடசாலைகள் தெரிவு செய்யும் பொழுது எமக்கு எதிர்கொள்ள நேரிட்ட பல அரசியல் ரீதியான இன ரீதியான  சவால்களை முறியடிப்பதற்காக எமக்கு பலமாக முன்னின்று எமது சமூகத்துக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்காக வேண்டி அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெரும் துணையாக நின்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் தலைமைத்துவமான கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களை இந்த இடத்தில் ஞாபகம் ஊட்டுவது எனது தலையான கடமையாகும். 

அதேபோல் கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்களின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்பட்ட  இத் திட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று செயற்படும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய அரசாங்கத்தின் தேசிய அமைப்பாளருமான கௌரவ பஸில் ராஜபக்ஷ அவர்களுக்கும், கல்வி அமைச்சர் கௌரவ ஜி எல் பீரிஸ் அவர்களுக்கும் கண்டி மாவட்ட அரசாங்கத்தின் முஸ்லிம் அரசியல் பிரதிநிதி என்ற அடிப்படையில் சமூகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்!

நன்றி

வசீர் முக்தார்
யட்டினுவர பிரதேச சபை உறுப்பினர்.

Post a Comment

0 Comments