facebook

இந்த வருடத்திற்குள் 60 - 70 சதவீதமானோருக்கு தடுப்பூசி போட திட்டம்


இந்த வருடத்திற்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 - 70 சதவீதத்திற்கு இடைப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி ஏற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி விரைவில் 14 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளை சீனாவிலிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பத்து லட்சம் அஸ்ட்ராசெனேக்கா தடுப்பூசிகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இதேவேளை சீனாவின் 5 இலட்சம் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு கிடைத்துள்ளன. இதற்கு முன்னர் 6 லட்சம் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து கிடைக்கப் பெற்றன.

ஊடகவியலாளர்களுக்கு மாவட்ட மட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments