facebook

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிர்வாகிகள் தெரிவு ஜூன் 07 இல்


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன 2021/2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினரை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் 07 திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க உள்ளிட்ட மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நடைபெறும்.

இந்த நிர்வாக சபை தெரிவு தேர்தலில் வீ. மணில் பெர்னாண்டோ தலைமையிலான ஒரு குழுவும், ஜஸ்வர் உமர் தலைமையிலான இன்னுமொரு குழுவும் போட்டியிடுகின்றனர்.

இவர்களை தெரிவு செய்வதற்காக அகில இலங்கையில் இயங்கிவரும் 62 கால்பந்தாட்ட லீக் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவ்விரு குழுக்களுக்கும் கடுமையான போட்டி நிகழும் என கால்பந்தாட்டத்துடன் தொடர்புடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தலைவர் பதவிக்கு போட்டியிடும் வி. மணில் பெர்ணன்டோ (களுத்துறைகால்பந்தாட லீக்கின் தலைவர்) தலைமையில் உப தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.

  • ஜி.எந்தனி டேவிட்சன் (மன்னார் கால்பந்தாட்ட லீக்கின் தலைவர், மன்னார் மாநகர சபை முதல்வர்)
  • காஞ்சன ஜயரட்ன (இரத்தினபுரி கால்பந்தாட்ட லீக்கின் தலைவர்)
  • அப்துல் கவ்பர் (மாவனல்ல கால்பந்தாட்ட. லீக்கின் தலைவர்)
  • சையிப் யூசுப் (மேக்கன்டைல் லீக்கின் தலைவர், சிட்டி லீக்கின் உப தலைவர்)
  • பொதுச்செயலாளர் பதவிக்கு அனுர டீ சில்வா (இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் தற்போதைய தலைவர், பொல்காவெல லீக்கின் தலைவர்)
  • பிரதி பொதுச் செயலாளர் பதவிக்கு டி.எச்.எஸ். இந்திக்க (மாத்தறை கால்பந்தாட்ட லீக்கின் செயலாளர்)
  • தொழிநுட்ப பிரதி செயலாளர் பதவிக்கு
  • ரோஹித்த பெர்னாண்டோ (வென்னப்புவ கால்பந்தாட்ட லீக்கின் தலைவவர்)
  • பொருளாளர் பதவிக்கு சுதாகர் தியாகராஜா
  • தேசிய சேவை கால்பந்தாட்ட லீக்கின் பொருளாளர்)
  • உதவி பொருளாளர் பதவிக்கு எஸ். எம். தௌபீக் (ஓட்டமாவடி கால்பந்தாட்ட. லீக்கின் தலைவர்)

மறுபுறத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜஸ்வர் உமர் (இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலாளர், இலங்கை கால்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் ததலைவர்) தலைமையிலான குழுவில் உப தலைவர் பதவிக்கு போட்டியிடும் நால்வரின் பெயர்கள் .

  • ரஞ்சித் ரொட்ரிக்கோ (முன்னாள் இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர், நீர்கொழும்பு கால்பந்தாட்ட. லீக்கின் தலைவர்)
  • ஆர்னல்ட் இமேனுவல் (யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவர்)
  • கே.பி.பி.பத்திரன (முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர், கோட்டே கால்பந்தாட்ட லீக்கின் தலைவர்)
  • சமன் டில்சான் நாகவக்க (காலி கால்பந்தாட்ட லீக்கின் செயலாளர்)
  • பொதுச்செயலாளர் பதவிக்கு உபாலி ஹேவகே (முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர், சீதவக்க கால்பந்தாட்ட. லீக்கின் தலைவர்)
  • பிரதி பொதுச்செயலாளர் பதவிக்கு வரதராசன் (வடமராட்சி கால்பந்தாட்ட லீக்கின் தலைவர்)
  • தொழிநுட்ப பிரதி செயலாளர் பதவிக்கு எம்.ஐ.எம்.அப்துல் மனாப் (அம்பாறை கால்பந்தாட்ட லீக்கின் செயலாளர்)
  • பொருளாளர் பதவிக்கு ஏ.எப். செல்லர் (திவலுப்பிட்டி கால்பந்தாட்ட லீக்கின் தலைவர்)
  • உதவி பொருளாளர் பதவிக்கு ஏ. நாகராஜன் (வவுனியா கால்பந்தாட்ட லீக்கின் செயலாளர்)

புதிதாக தெரிவு செய்யப்படும் நிர்வாகசபை மூலம் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

Post a Comment

0 Comments