facebook

காலி, களுத்துறை மாவட்டங்களில் மண் சரிவு அபாயம்

களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலுள்ள சில பிரதேசங்கள் மண் சரிவு அபாயமுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஆர். எம். எஸ். பண்டார தகவல் தருகையில்,பெரும்பாலான பகுதிகள் அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டாலும் எவரும் அதனை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இதனால் அவர்கள் பிரச்சினைகளுக்கும் ஆபத்துகளுக்கும் முகம்கொடுக்கின்றனர்.
இதனால் களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள, மத்துகம, அகலவத்த, பாலிந்தநுவர, களுத்துறை, பகுதிக்கும் காலி மாவட்டத்தில் நெலுவ, தவலம, போன்ற பகுதிகளும் மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments