facebook

லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவித்தல்!
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக லக்ஷபான நீர்தேக்கத்தில் 3 வான்கதவுகள் 2 அடி அளவில் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த இரண்டு நீர்தேக்கத்தில் நீர் வெளியாகின்றமையால் களனி ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.

Post a Comment

0 Comments