facebook

எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கமில்லை: சந்திரிக்கா

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்த எண்ணமும் தனக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது தந்தையால் ஆரம்பிக்கப்பட்டு, தாயாரால் பாதுகாக்கப்பட்டு, 1994 ஆம் ஆண்டு தன்னை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவலமான நிலையில் இருந்து, கட்சியை மீட்டு கட்சியின் உரிமையாளர்களான பஞ்ச மகா சக்திகளிடம் அதனை ஒப்படைப்பது தனது ஒரே எதிர்பார்ப்பு எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக எந்த அர்ப்பணிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் நோக்கில், அநீதிக்கு உள்ளாகியிருக்கும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் தனது பங்களிப்பு வழங்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments