facebook

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவாக சந்திரிக்கா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பிரசாரங்களை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடுவார் என்று உறுதியாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக சிங்கள மக்களின் வாக்குகளை திரட்டுவதற்காக, சந்திரிகாவை பிரசாரத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  
தமக்கு அரசியலில் ஈடுபட நாட்டமில்லாத போதும், எதிர்க்கட்சித் தலைவருக்காக அவர் இதனை ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்படி ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சந்திரிக்கா, ரணிலுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments