facebook

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்!

டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக  இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்தார்.
 
புத்தளம் முதல் மேல் மாகாணப் பிரதேசங்களில் இந்த தடுப்பு நடவடிக்கை 
மேல் மாகாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் யூ.ஏ.பி மெதிவலயின் மேற்பார்வையில் இன்று (2) முதல் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 
பிரதேச பொதுச் சுகாதரா அதிகாரிகளுடன் இராணுவத்தினர் இணைந்து நுளம்புகள் பெருகும் பிரதேசங்களில் ஆய்வுகளை மேற்கொள்வர். அதன் அடிப்படையில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
 
டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்ககைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு 
சகல பாதுகாப்பு படைத் தலைமையங்களுக்கும் இராணுவத் தளபதி   உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments