facebook

மட்டக்களப்பில் கடை உரிமையாளரை மிரட்டி கொள்ளை


மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் வர்த்தக நிலையம் ஒன்று இனந்தெரியாதவர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று மாலை 6.15 அளவில் வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

காரில் வந்த இருவர் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை மிரட்டி சுமார் 70 ஆயிரம் ரூபா பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர். 

இது தொடர்பிலான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

Post a Comment

0 Comments