facebook

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடை

ஜீ.7 நாடுகளின் தலைவர்கள் பிரசல்ஸில் சந்தித்துள்ளனர்.
இதன் போது ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடையை ஏற்படுத்துவது தொடர்பில் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரெயினில் இடம்பெறும் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு மொஸ்கோவின் செயற்பாடுகளே காரணம் என்று, ஜீ.7 நாடுகளின் தலைவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரைமியா விவகாரத்தினால் ஜீ7 அமைப்பில் இருந்து ரஷ்யா ஒதுக்கப்பட்டதன் பின்னர், முதல் முறையாக அதன் மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments