facebook

இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த பாடசாலை மாணவி

மட்டக்களப்பு கதிரவெளியில் நேற்றுமாலை இராணுவ வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்தார். புத்தள பிரதேசத்தில் இருந்து திருகோணமலை நோக்கி இராணுவ உயர் அதிகாரிகள் பயணம் செய்த வாகனம் ஒன்று, பாடசாலையிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியை மோதியதில் அவர் உயிரிழந்தார். கதிரவெளி கனிஷ்ட வித்தியாலயத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் ம.பொபித்தா (வயது 7) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments