facebook

சிரியாவில் இன்று ஜனாதிபதி தேர்தல்

சிரியாவில் இன்று ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் இடம்பெறுகின்றன.

பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த வாக்களிப்புகள் இடம்பெறுகின்றன.
இந்தநிலையில் தேர்தலில் ஜனாதிபதி பஸார் அல் அசாத் மூன்றாம் தடவையாகவும் 7 வருட கால ஆட்சிக்கு தெரிவாவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த தேர்தல் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்று சிரியாவின் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்நாட்டு போரால் இடம்பெயர்ந்துள்ள நிலையி;ல் இந்த தேர்தல் நடத்தப்படுவது பொருத்தமானது அல்ல என்று விமர்சகர்களும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments