facebook

மஹிந்தோதய தொழில் நுட்ப விஞ்ஞான பீடத்துக்கு அடிக்கல் நட்டினார் ஜனாதிபதி

மஹிந்தோதய தொழில் நுட்ப விஞ்ஞான பீடங்களுக்கான அடிக்கல் நடும் ஆரம்ப தேசிய வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு லும்பினி வித்தியாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.
 
தொழில் நுட்ப விஞ்ஞான பீடத்துக்கான கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ நட்டினார். அத்துடன் பாடசாலைக்கான புதிய விளையாட்டரங்கையும் திறந்துவைத்தார். அதன்பின்னர் வைபவத்தில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார்.
 
இன்று நாடு முழுவதிலும் தெரிவு செய்யப்பட்டுள்ள 250 பாடசாலைகளில் மஹிந்தோதய தொழில் நுட்ப விஞ்ஞான பீடங்களுக்கான அடிக்கல் நடும் வைபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய நிகழ்வில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, பிரதியமைச்சர்
மொஹான் லால் கிரேறு, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வியமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments