facebook

இலங்கையுடன் இரகசிய உடன்படிக்கை இல்லை: சர்வதேச நாணய நிதியம்

இலங்கை அரசாங்கத்துடன் இரகசிய உடன்படிக்கைகள் எதுவும் செய்து கொள்ளப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உதவி தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போது இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள பல உப உடன்படிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்தநிலையில் இது குறித்து ஐக்கிய நாடுகளின் இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர் நேற்று ரைஸிடம் கேள்வி எழுப்பினார்.
இதன்போது தாம் எழுதி வைத்திருந்த பதிலை ரைஸ வாசித்தார். அதில் தம்முடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை இலங்கை 2012 ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்து விட்டதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து தற்போது இலங்கை அரசாங்கத்துடன் எந்த நிதிக் கொடுப்பனவு உடன்படிக்கைகளும் இல்லை என்றும் ரைஸ் தெரிவித்தார்.
அத்துடன் பிரதான உடன்படிக்கைகளுக்கு புறம்பாக வேறு உடன்படிக்கைகள் இல்லை என்றும் ரைஸ் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments