facebook

சீரடைந்து வரும் கால நிலை

மாத்தறை, இரத்தினபுரி  மாவட்டங்களில் இன்று காலநிலை சீரடைந்துவருவதாக களுத்துறை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
 
நேற்று மாலை வரை தொடர்ச்சியாக பெய்த மழை தற்போது சற்று ஓய்ந்துள்ளதாகவும் மக்கள் மெதுவாக இயல்பு வாழ்க்கை்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இதேவேளை, கிங் கங்கை சில பகுதிகளில் பெருக்கெடுத்துள்ளதால், தவலம, தெனியாய மற்றும் எல்பிட்டிய ஆகிய பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை காணப்படுவதாக காலி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments