facebook

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 2012ம் ஆண்டு மே மாதம் முதல் எதிர்கொண்டு வந்த சம்பள முரண்பாட்டை இம் மாதம் முதல் தீர்த்து வைப்பதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 2012 ம் ஆண்டு மே மாதம் முதல் எதிர்கொண்டு வந்த சம்பள முரண்பாடு தீர்த்து வைக்கப்பட்டு அதற்குரிய சம்பளம் இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.
இதற்குரிய சகல நடவடிக்கைகளையும் இலங்கை மின்சார சபை முகாமைத்துவம் மேற்கொண்டுள்ளதாக அதன் அதிகாரியொருவர் நேற்று குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில் அற்ப அரசியல் இலாபம் பெறும் நோக்கில் ஓரிரு தொழிற்சங்கங்கள் செயற்பட முனைவது ஏற்றுக் கொள்ள முடியாது என்று தொழிற்சங்க முக்கியஸ்தரொருவர் நேற்றுக் கூறினார்.
இலங்கை மின்சார சபையின் சகல தரத்திலுமான ஊழியர்களுக்கு 2012 ம் ஆண்டு மே மாதம் முதல் எதிர்கொண்டு வந்த சகல சம்பள முரண்பாடுகளையும் தீர்த்து வைக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதன்படி, கடந்த 2012 ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட இச்சம்பள முரண்பாடு அதே மாதம் நிறைவேற்றுத் தரத்திலுள்ள ஊழியர்களுக்கு தீர்த்து வைக்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது.
ஏனைய ஊழியர்கள் எதிர்கொண்டு வந்த இச்சம்பள முரண்பாடும் தீர்த்து வைக்கப்பட்டு அதற்குரிய கொடுப்பனவு இம்மாதம் முதல் சம்பளத்துடன் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை
, 2012 ம் ஆண்டு மே மாதம் முதல் நிலவி வந்த சம்பள முரண்பாட்டு நிலுவைத் தொகையை இரண்டு கட்டங்களாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்நிலுவையில் 50 வீதமும் எஞ்சிய 50 வீத நிலுவையை 2015 ஆண்டு ஜுலை மாதம் முதலும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபைத் தொழிற்சங்கங்களுடன் நடாத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையிலேயே இந்த இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன என்றும் மின்சார சபை தெரிவித்தது. 

Post a Comment

0 Comments