facebook

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட்டால் பாரிய பிரச்சினைகள் ஏற்படும் : ஜே.என்.பி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட்டால் பாரியளவில் பிரச்சினைகள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக விமல் வீரவன்ச தலைமையிலான ஜே.என்.பி. கட்சி தெரிவித்துள்ளது. நிறைவெற்ற அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது மட்டும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையப் போவதில்லை என கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற தேர்தல் முறைமை உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னரான யதார்த்தங்களை புரிந்து கொண்டே புதிய அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட 12ம் அம்ச கோரிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்ததகாத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கோரிக்கைக்கு அமைய நிறைவேற்று அதிகார  ஜனாதிபதி முறைமையை மட்டும் ரத்து செய்வதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments