facebook

படைவீரர்களுக்கு ராஜமரியாதை அளிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் பொய்யானவை : ஐ.தே.க

படைவீரர்களுக்கு ராஜமரியாதை அளிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் பொய்யானவை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. நாட்டை பாதுகாத்த படையினர் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு முக்கிய பிரபுக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்குவதாக இந்த அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

படைவீரர்களின் பெற்றோருக்கு 750 ரூபா கொடுப்பனவு வழங்குவதாகத் தெரிவித்த போதிலும், தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு மட்டுமே இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் காலத்தில் அரசாங்கம் அளித்து வரும் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். படைவீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்து பாராளுமன்றில் கேள்வி எழுப்பிய போதிலும் அதற்கு உரிய பதிலளிக்கப்படவில்லை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments