facebook

வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை

வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களை மேலும் மூன்று மாத காலத்திற்கு விளக்கமறியலில் வைக்குமாறு சட்ட மா அதிபர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு வடக்கிற்கு பொறுப்பான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர், அவரது மகன் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களை இவ்வாறு விளக்க மறியலில் வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மூவர் அடங்கிய விசேட நீதவான் குழு முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது சட்ட மா அதிபரின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பிரதி சொலிசுட்டர் ஜெனரல் ஆயேஷா ஜினசேன, சந்தேக நபர்களை மேலும் மூன்று மாத காலத்திற்கு புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதவான்களிடம் கோரியுள்ளார்.
முதலாம் சந்தேக நபர் ஏற்கனவே விசாரணை நடாத்துவோரையும் சாட்சியாளர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.
வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிணையில் விடுதலை செய்தால் சாட்சியாளர்களை அச்சுறுத்தக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகும்.
எனவே சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவிடுமாறு அயேஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மீளவும் நடைபெறவுள்ளது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyGTYLZfr4.html#sthash.6IgGrTTd.dpuf

Post a Comment

0 Comments