facebook

இன்று கரையோரப்பகுதிகளில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

நாட்டின் பெரும்பாலான கரையோரப்பகுதிகளில் இன்று (03) மழை பெய்யும் என்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது என்றும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
புத்தளத்திலிருந்து அம்பாந்தோட்டை வழியாக கொழும்பிலிருந்து காலி வரையான கடலோர பிரதேசங்களில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்மேற்கு கரையோரமாக மணிக்கு 20-40 கி.மீ மற்றும் 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

காலியிலிருந்து பொத்துவில் ஊடாக மாத்தறையிலிருந்து கொழும்பு, முல்லைத்தீவு, மன்னார், சிலாபம்,திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் காற்று மணிக்கு 70-80 கி.மீ அளவில் எதிர்பார்க்கப்படுவதுடன் மழை பெய்வதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments