facebook

சவுதியில் மனைவியை விபச்சாரத்தில் தள்ளிய கணவன்

சவுதியில் மனைவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கணவருக்கு 8 ஆண்டு சிறையும் ஆயிரம் சவுக்கடிகளையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுதியை சேர்ந்த நபர் ஒருவன் தனது மனைவிக்கு சமூக வலைத்தளங்களின் மூலம் விபச்சார தரகராக வேலை பார்த்து வந்துள்ளான்.
இவ்விடயம் பொலிசாருக்கு தெரியவந்ததன் பேரில், அந்நபர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, அந்நபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்ததுடன், தண்டனை காலத்திற்குள் ஆயிரம் சவுக்கடியும் தரவேண்டும் என  தீர்பளித்துள்ளார்.
மேலும் பெண்கள் காப்பகத்தில் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ள அவனது மனைவியின் மீது தனியாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. 

Post a Comment

0 Comments