facebook

இலங்கையின் காற்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளராக நிகோலா கவசோவிக்

இலங்கையின் புதிய காற்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக நிகோலா கவசோவிக் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என இலங்கை காற்பந்தாட்டச்சம்மேளனம் தெரிவுத்துள்ளது.
காற்பந்தாட்ட பயிற்றுவிப்புத் துறையில் நீண்டகால அனுபவமுடைய நிகோலா சேர்பியன் நாட்டவராவார்.

இலங்கையின் தேசிய காற்பந்தாட்ட அணியை பலப்படுத்தும் நோக்கிலான பயிற்சிகள் வழங்க தெரிவு செய்யப்பட்ட நிகோலாவுடனான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

இப்பயிற்சியினூடாக தேசிய காற்பந்தாட்ட அணி எதிர்கால சவால்களை எதிர்நோக்கும் வகையில் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் என இலங்கை காற்பந்தாட்டச்சம்மேளனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments