facebook

ரெய்னா படைத்த புதிய சாதனை

ஐ.பி.எல் அனைத்து தொடரிலும் சராசரியாக 400 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார்.

ஐ.பி.எல் ஆரம்பம் முதலே சென்னை அணி அசத்தியது.இதன் மூலம் விரைவிலே பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

தொடர்ந்து முதல் இரு இடத்தை பிடித்து வந்த சென்னை அணி திடீர் தோல்விகளாலும், கொல்கத்தா அணியின் எதிர்பாராத அதிரடியினாலும் இக்கட்டான நிலைமையை சந்தித்தது.

பிறகு பஞ்சாப் அணியிடம் வீழ்ந்து இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி 7 முறை பிளே-ஆப் சுற்றுக்கும், 5 முறை இறுதிப்போட்டிக்கும் நுழைந்தது. இது மட்டுமல்லாது இரண்டு முறை கிண்ணத்தை கைப்பற்றியும் அசத்தியது.

சென்னை அணியின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணம், சுரேஷ் ரெய்னா தான் என்றே சொல்லலாம். டோனியைப் போலவே, ரெய்னாவும் ஆரம்பம் முதல் அனைத்து சீசன்களிலும் சென்னை அணிக்காக ஆடி வருகிறார்.

சென்னை அணியின் சிறந்த ஆட்டம் போலவே அனைத்து தொடர்களிலும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் ரெய்னா.

ஐபிஎல் வீரர்களிலேயே 3 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை நடப்பாண்டு தொடரின் தொடக்கத்திலேயே பெற்றார் ரெய்னா. தற்போது அவரின் ஐபிஎல் மொத்த ஓட்ட எண்ணிக்கை 3238. மொத்தம் 114 ஆட்டங்களில் ஆடி இந்த ஓட்டங்களை அடித்துள்ளார்.

மேலும் தற்போது ஐபிஎல் போட்டிகளின் 7 சீசனிலும் சராசரியாக 400 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் சுரேஷ் ரெய்னா பதிவு செய்து, சென்னை ரசிகர்களின் ஹீரோவாக மாறியுள்ளார்.

Post a Comment

0 Comments