facebook

மாகாண விளையாட்டு விழாவில் இம்முறை கராத்தே போட்டி

வருடந்தோறும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெறும் விளையாட்டு விழாவில் இம்முறை கராத்தே சுற்றுப்போட்டி நேற்று முன்தினம் (01) ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட குருக்கள்மடம் மகா வித்தியாலய உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியினை கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இச்சுற்றுப்போட்டியில் ஆண்கள்,பெண்கள் பிரிவினைச்சேர்ந்த சுமார் நூறுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தேசிய போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகளை பெறுவார்கள் என கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் மதிவண்ணன் தெரிவித்தார்.

இதன்போது இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தினை மட்டக்களப்பு மாவட்டமும் இரண்டாம் இடத்தினை அம்பாறை மாவட்டமும் மூன்றாம் இடத்தினை திருகோணமலை மாவட்டமும் பெற்றுக்கொண்டது. 

Post a Comment

0 Comments