facebook

முல்லைத்தீவு யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு

ஹைதராமனி தனியார் நிறுவனத்தினால் முல்லைத்தீவில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சாலை ஒன்றில் முல்லைத்தீவு யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது. 
இது தொடர்பான நேர்முகப்பரீட்சைகள் கடந்த திங்களன்று முல்லைத்தீவு பாதுகாப்புபடை 683ஆவது படைசேனை தலைமையகத்தில் நடைபெற்றது. 

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 160 யுவதிகள் இந்த நேர்முக்பரீட்சையில் கலந்துக் கொண்டனர். முல்லைத்தீவு பாதுகாப்புபடை தளபதி மேஜர் ஜெனரால் ஜகத் டயஸ் குறித்த தொழிற்சாலை அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்தே, அவர்கள் இந்த நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நேர்முக பரீட்சையில் கலந்துக்கொண்ட யுவதிகளுக்கு  பாதுகாப்புப் படையினரால் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments