facebook

டேவிட் கேமரூன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக போவதாக மிரட்டல்

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட 28 நாடுகள் இணைந்து, ஐரோப்பிய ஒன்றியம் என்ற பொதுவான அமைப்பின் நாடாளுமன்றம் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருஸல்ஸ் நகரில் செயல்பட்டு வருகிறது.
கடந்த வாரம் இங்கு நடைபெற்ற தேர்தலில், ஜேர்மனியின் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான, 'கிறிஸ்டியன் டெமாகிராட்ஸ்' அணியினர் மொத்தமுள்ள, 751 இடங்களில், 213 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
ஜேர்மனியின் இந்த வெற்றி காரணமாய் அதன் ஆதிக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகமாய் தொடர்ந்தால் பிரிட்டன் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவராக, லக்சம்பர்க் நாட்டின் முன்னாள் பிரதமர் ஜீன் கிளாடி ஜங்கர் பெயரை, ஜேர்மனியின் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல், இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், "ஐரோப்பிய கமிஷன் தலைவராக ஜங்கர் நியமிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக நேரிடும்” என தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஸ்வீடன் மற்றும் ஹங்கேரி நாடுகளின் தலைவர்களும், ஜங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments