facebook

இங்கிலாந்தில் மந்திரம் செய்த இந்தியருக்கு சிறை

இங்கிலாந்தில் மோசடி வேலைகளில் ஈடுபட்ட வந்த இந்திய நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த மந்திரவாதியான முஹம்மது அஷ்ரஃபி என்பவர், இங்கிலாந்தில் உள்ள லிய்செஸ்டர் நகரில் நூதனமான விளம்பரங்களை துண்டு பிரசுரங்கள், வானொலி மற்றும் நாளேடுகளின் மூலம் வெளியிட்டு வந்தார்.
’கமல்-ஜி’ என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட இவர், தன்னை சாய்பாபாவின் பக்தர் என்றும், ஜாதக குறைபாடுகள், குடும்ப உறவுகள், தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு தனது மந்திர சக்தியின் மூலம் நிவாரணம் செய்து வைப்பதாக தொடர்ந்து விளம்பரப்படுத்தி வந்ததை அறிந்த லிய்செஸ்டர் நகர பொலிசார் இது தொடர்பாக பொதுமக்களை எச்சரித்து வந்தனர்.
இருப்பினும், இவரது விளம்பர மாயவலையில் மயங்கி, சிக்கிய ஒரு பெண்ணிடம் அவருக்கு லாட்டரியில் 6 கோடி பவுண்டுகள் விழுந்துள்ளதாக கூறி, போலி ஆவணங்களை காட்டி, அந்த பெண்ணிடம் இருந்து 60 ஆயிரம் பவுண்டுகளை மோசடியாகவும், மிரட்டியும் பறித்துக் கொண்டார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து, அந்த போலி மந்திரவாதியை கைது செய்த பொலிசார், உரிய ஆதாரங்களுடன் லிய்செஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கின் மறு விசாரணையை இம்மாத இறுதிக்கு ஒத்திவைத்த நீதிபதி குற்றவாளியை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments