facebook

'ரேன' இளைஞர் முகாம் இன்று குருணாகலில் ஆரம்பம்

பொதுத்தாவரப் பூங்கா பராமரிப்பு அமைச்சு பாடசாலை மாணவர்களுக்கென ஏற்பாடு செய்துள்ள 'ரேன' இளைஞர் முகாம் இன்று (06) ஆரம்பமாகிறது.
இம்முகாம் இன்று  (06) தொடக்கம் எதிர்வரும் 8ஆம் திகதி வரை குருணாகல இந்துல்கொடகந்த தேசிய பாடசாலையில் இம்முகாம் நடைபெறவுள்ளது.

 பொதுத்தவாரப்பூங்கா பராமரிப்பு அமைச்சர்  ஜயரத்ன ஹேரத்தின் ஆலோசனைக்கமைய குருணாகல மாவட்ட பாடசாலை மாணவ மாணவியருக்காக இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இந்துல்கொடகந்த தேசிய பாடசாலையை துப்புரவு செய்து சுற்றுப்புறச்சூழலை அலங்கரிக்கும் நோக்கில் நடத்தப்படும் இம்முகாமில் அனைத்து தேவைகளையும் பொதுத்தாவரப் பூங்கா பராமரிப்பு அமைச்சு வழங்கியுள்ளது.

சிரமதானத்தைத் தவிர பிரதேச இளைஞர் யுவதிகள் முகம்கொடுக்கும் சமூக பிரச்சினைகளை அறிந்துக்கொள்ளல்- அவை தொடர்பாக கலந்துரையாடல்- இளஞ்சமுதாயத்தை போதைப்பொருள் பாவனை- சமூக விரோதச் செயல்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது என்பது தொடர்பாக விழிப்புணர்வு வழங்குதல் - ஆரோக்கியம் - விளையாட்டு போன்ற பல விடயங்கள் தொடர்பாக இவ்விரண்டு நாட்களில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

பொதுத்தாவரப் பூங்கா பராமரிப்பு அமைச்சர் ஜயரத்ன ஹேரத்தின் ஆலோசனைக்கமைய வடமேல் மாகாணச்சபை உறுப்பினர் சட்டத்தரணி பியூமால் ஹேரத்தின் மேற்பார்வையில்- குருணாகல நாம் மற்றும் ரியல் ஹார்ட்ஸ் ஆகிய இளைஞர் கழகங்கள் இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளன.

பேராதனை  தாவரவியல் பூங்கா திணைக்களம்- குருணாகல பிரதேச சபை- குருணாகல தேசிய இளைஞர் சேவைகள் சபை- வடமேல் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியன இந்த முகாமில் கலந்துகொள்ளவுள்ளன. 

Post a Comment

0 Comments