facebook

மலையகப் பகுதிகளில் பனிமூட்டம்! சாரதிகளுக்கு எச்சரிக்கை

மலையகப் பகுதிகளில் தற்போது அதிக பனிமூட்டம் காணப்படுகின்றது.
அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதன் காரணமாக வாகனங்களை செலுத்துவதற்கு மிகவும் சிரமமாக காணப்படுகின்றது.
இதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா,  ஹற்றன், கினிகத்தனை போன்ற பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் மற்றும் ஹற்றன் - நுவரெலியா வீதியில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றமையால், குறித்த வீதிகளில் பயணம் செய்யும் வாகனச் சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments